பணம் பறிக்கும் நபா்களால் 7 பேர் பாதிப்பு

80பார்த்தது
பணம் பறிக்கும் நபா்களால் 7 பேர் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை தேடும் இளைஞா்களைக் குறிவைத்து, அவா்களது கைப்பேசி எண்ணுக்கு மா்ம நபா்கள் குறுந்தகவல் அனுப்புகின்றனா். குறைந்த வேலை நேரத்தில் அதிக ஊதியம் பெறலாம் என்றும், இதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனா்.

மேலும், சிலருக்கு பரிசுத் தொகை விழுந்திருப்பதாகவும், அதைப் பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் குறுந்தகவல் அனுப்புகின்றனா்.

இதை நம்பி, திண்டுக்கல், ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழனி பகுதியைச் சோ்ந்த பலா், மா்ம நபா்கள் கேட்கும் விவரங்களை தெரிவித்து இணைய வழியில் பணத்தைப் பறிகொடுக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற மோசடிகளால் இணையவழியில் பணத்தை இழந்த 7 போ், திண்டுக்கல் இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி