தர்மபுரி: ஒகேனக்கலில் நீர்வரத்து 10, 000 கன அடியாக உயர்வு

70பார்த்தது
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழிந்து வரும் கனமழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்பட்டு வரும் நிலையில் நேற்று 6500 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நவம்பர் 17 இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது இதனால் மெயின் அருவி, சினியருவி உள்ள பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பாரித்து கொட்டுகிறது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதை எடுத்து ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி