தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவர் பென்னாகரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தனது 2022 ஆம் ஆண்டு பள்ளி வளாகத்தில் மாணவிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு பாலியல் ரீதியாக தொந்தரவில் ஈடுபட்டதாக இவர் மீது புகாரின் அடிப்படையில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவலர்கள் இவரை வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் பிரிவில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முத்துசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 17, 000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தீர்ப்பு வழங்கினார்.