தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக தமிழக மற்றும் கர்நாடக காவிரி நிர்பிடிப்பு பகுதியில் பொழிந்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதாக காணப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 7000 கனஅடி முதல் 5, 000 கன அடியாக நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்த நிலையில் நவம்பர் 29 இன்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 5, 000 கன அடியாக நீர்வரத்து உள்ளது இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் நீரின்றி வறண்டு பாறைகளாக காணப்பட்டு வருகிறது இதனால் காவிரி ஆற்றின் அழகை காண வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.