புதூர் மாரியம்மன் கோவில் வளாக தூய்மை பணி தீவிரம்

73பார்த்தது
புதூர் மாரியம்மன் கோவில் வளாக தூய்மை பணி தீவிரம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு நகரப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி வருகின்ற வெள்ளிக்கிழமை வரை நடைபெற்று வருகின்றது இந்த திருவிழாவிற்கு பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தர்மபுரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் அருள்மிகு புதூர் மாரியம்மன் கோவில் வளாகப் பகுதியை பக்தர்கள் நலன் கருதி தூய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் மற்றும் ஊராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு பக்தர்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுமாறு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறும் விழிப்புணர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி