தர்மபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, எல்ஐசி முகவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் தலைவர் மந்திரி தலைமை வகித்தார். முகவர்கள் சக்திவேல், ஆறுமுகம், மாதையன், திருநாவுக்கரசு, முருகே சன், அன்பழகன், மலர்வண்ணன், சேகர், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, சிஐடியூ நாக ராஜன், பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகி சேலம் கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்கம் தெய்வானை, சிஐடியூ அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சண்முகம், சிஐடியூ மத்திய மின்ஊழியர் சங்க ஜீவா, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மல்லிகா, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க முத்து மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலிசிதாரர் கட்டும் பிரிமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸ் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பப்பட்டன. எல்ஐசி முகவர் சந்தியா நன்றி கூறினார்.