அடிப்படை வசதிகளை செய்து தருவேன் - பாமக செளமியா

1053பார்த்தது
அடிப்படை வசதிகளை செய்து தருவேன் - பாமக செளமியா
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கோணம்பட்டியில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் என்னை வெற்றி பெற செய்தால் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன் என பொதுமக்களிடம் கூறி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் அரசாங்கம், பசுமை தாயக மாவட்ட செயலாளர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் முருகன், சமூக முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பசுமை தாயக ஒன்றிய செயலாளர் ரகு , கிளை தலைவர் பாபு, கிளை செயலாளர் பழனிவேல் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்