தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கனூர் பகுதியில் எழுந்தருளிள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமூல பெருமாள் சாமி திருக்கோயிலில் இன்று அக்டோபர் 05 புரட்டாசி நடு சனிக்கிழமை முன்னிட்டு ஆதிமூல பெருமாள் சாமிக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆதிமூல பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் தர்மபுரி உதவி ஆணையாளர் ராஜா, ஆய்வாளர் பரமன், உதவியாளர் எழிலரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.