தர்மபுரி: வெண்ணாம்பட்டியில் விபச்சார பெண் புரோக்கர் கைது

82பார்த்தது
தர்மபுரி நகரப் பகுதிக்கு உட்பட்ட வெண்ணாம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒருவீட்டில் விபசாரம் நடப்பதாக நகர பி1 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் காவலர்கள் அந்த பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் விஜயா என்பவர் வெளி மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அந்த வீட்டில் இருந்த வாலிபர், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட தர்மபுரியை சேர்ந்த ஒரு பெண்ணை மீட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி