தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சேஷம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்துராஜ், இவருடைய மூத்த மகன் தரணிதரன் (வயது 18), இவர் நல்லம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பின்னர் கல்லூரிக்கு செல்லாமல் ஒரு மாத காலமாக கோயம்புத்தூரில் தனியார் வேலைக்கு சென்று வந்துள்ளார். பெற்றோர்கள் நீ மீண்டும் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். எனக்கு படிப்பு வராது என்ற மனவேதனையில் இருந்த தரைதன் நேற்று காலை சுமார் 8 மணிக்கு மேல் பெற்றோர்கள் வெளியில் சென்ற போது கதவை தாளிட்டு உட்புறத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அதியமான் கோட்டை காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.