தர்மபுரி தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்காக இரண்டு சக்கர வாகன நேற்று பேரணி நடைபெற்றது. தர்மபுரி தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விபத்து இல்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் பெரியவர்களை வைத்து பட்டாசு வைக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் பொழுது தண்ணீர் பக்கெட் வைத்துக் கொள்ள வேண்டும். பறவைகளுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும், விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும். போன்ற பதாகைகள் பொருத்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வாகன பேரணி நடைபெற்றது. இதில் சுமார் தீயணைப்புத்துறை அலுவலர்கள் இரண்டு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டனர்.