மது விற்ற 5 பேர் கைது

576பார்த்தது
அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் படி தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் பொம்மிடி பகுதியில் மது விலக்கு சம்பந்தமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசின் அனுமதி இன்றி வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பொம் மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த சின்னம்மாள் (வயது 66), ரகுபதி (50), பையர்நத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமி (66), மஞ்சநாய்க்கன்தண்டாவை சேர்ந்த சங்கர் (57), வேப்பமரத் தூரை சேர்ந்தகிருஷ்ணன் (52) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி