அரசு மாணவிகளுக்கு மலர்கள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

53பார்த்தது
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன
இதன் ஒரு பகுதியாக தருமபுரி பேருந்து நிலையம் அருகே அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பள்ளி மாணவிகளை வரவேற்கும் வகையில் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்
இதனையடுத்து மாணவியருக்கு இலவச ஆதார் சேவை மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கிவைத்தும் பிளஸ் - 2 மாணவிகளுக்கு இலவச புத்தகங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. SP வெங்கடேஸ்வரன் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அன்பழகன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :