தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகேந்திரமங்கலம் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவம் நடந்தது.
தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தி தர்மபுரியை சேர்ந்த கற்பகம், வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல், மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வடிவேல், ஜோதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று செப்டம்பர் 13 தர்மபுரியை சேர்ந்த கற்பகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார். தொடர்ந்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் குண்டர் சட்டத்தில் கைது செய்தார். இதற்கான உத்தரவை காவலர்கள் தர்மபுரி சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.