பராமரிப்பு பணிகளுக்காக நவம்பர் மாதத்தில் 2 நாட்களுக்கு UPI சேவைகள் நிறுத்தப்படுவதாக HDFC வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் வங்கி சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த UPI சேவைகளுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள HDFC வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நவ.5 காலை 12:00 முதல் 2:00 மணி வரையிலும், நவ.23 காலை 12:00 முதல் 3:00 மணி வரையிலும் UPI செயல்பாடுகள், பரிவர்த்தனைகள் உட்பட, அனைத்து தளங்களிலும் வங்கி சார்ந்த பணிகள் செயலிழக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.