தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 4 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. நவம்பர் 04, 08, 09, 10 ஆகிய 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.