பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் டிசம்பர் 21, திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தருமபுரி பாமக மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பி. வெங்கடேஷ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை தலைவர் சின்னசாமி, மாநில துணை செயலாளர் சிவசக்தி, மாவட்ட தலைவர் மு. செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி. கே. மணி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இல. வேலுசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர்.
திருவண்ணாமலையில் வருகின்ற டிசம்பர்-21 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து 10, 000 விவசாயிகளை பங்கேற்க அனைத்து ஒன்றியங்களிலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது, அனைத்து விவசாய பெருமக்களையும் சந்தித்தல் போன்றவற்றை மேற்கொள்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.