காரிமங்கலத்தில் 22 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை

73பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் வாரச்சந்தை, செவ் வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக, திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப் பட்டணம், பாரூர், குடிமேனஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவ சாயிகள், தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தைக்கு சுமார் 2 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவை பொறுத்து 7 முதல் 13 வரை விற்பனை நடந்தது. சந்தையில் சுமார் 22 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. திருமணம் முகூர்த்த நாட்கள் வர இருப்பதால், தேவை அதிகரித்து விற்பனையும் அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி