காரிமங்கலங்கத்தில் உள்ள திமுக கட்சி அலுவலத்திற்கு நேற்று வருகை தந்த தர்மபுரி எம்பி மணிக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் கட்சியினர் அவரை வரவேற்று மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் மாநில தீர்மான குழு செயலாளர் கீரை விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிஅமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் கலந்துக் கொண்டனர்.