தர்மபுரி மாவட்டம் காரிமங் கலத்தில், செவ்வாய் கிழமை கால்நடை சந்தை நடப்பது வழக்கம். சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கால்நடைகளை விற்ப னைக்கு கொண்டு வரு கின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 400 மாடுகள், 500 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து 27 லட்சத்திற்கு மாடுகளும், 33 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. அதே போல், நாட்டுக்கோழி விற் பனை 3 லட்சம் அளவில் இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்தது எனவும் நேற்று ஒரே நாளில் சுமார் 63 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.