தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராம் தனியார் பள்ளியில்மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், சிவகங்கை, உள்ளிட்ட மொத்தம் 18 மாவட்டங்களில் இருந்து சுமார் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டிகளில் 9 வயது கீழ், 14 வயது கீழ், 15 வயது கீழ், பொதுப்பிரிவு, என நான்கு பிரிவுகளில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை சதுரங்க கழகத்தின் தலைவர் டிஎன்சி மணிவண்ணன், தமிழ்நாடு மாநில இணை செயலாளர் பி. ராஜசேகரன், தர்மபுரி மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் செந்தில்குமார்,
ஸ்ரீராம் பள்ளி சேர்மன் வேடியப்பன், ஸ்ரீராம் பள்ளி மேனேஜர் டைரக்டர் தமிழ்மணி, தர்மபுரி மாவட்ட சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் துரைசாமி, தர்மபுரி மாவட்ட சதுரங்க கழகத்தின் பொருளாளர் எஸ். சேகர், மற்றும் ஸ்டேட் லெவல் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.