அதிமுக கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு பணம் தரவில்லை என புகார்

550பார்த்தது
தர்மபுரியில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அசேகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்திற்கு மாவட்ட முழுவதும் இருந்து கட்சித் தொண்டர்கள் பெண்கள் ஏராளமானோர் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுக் கூட்டத்திற்கு சென்றிருந்தனர். குறிப்பாக கடத்தூர் பகுதியில் இருந்து சரக்கு வாகனம் பேருந்து மூலமாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு குடிநீர், சாப்பாடு, பணம் 200 ரூபாய் பேசியபடி கொடுக்காமல் கூட்டம் முடிந்த பின்பு பெண்களை கடத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு அதிமுக கட்சியினர் எதுவும் தராமல் அனைவரும் ஓட்டம் பிடித்ததாக தெரிவித்து பெண்கள் காத்திருந்தனர். இதனால் செய்வது அறியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இரவு 9 மணியிலிருந்து 11 மணி நள்ளிரவு வரை பேருந்து நிலையத்தில் யாரும் பணம் தரவில்லை என கட்சியினருக்கு சாபம் விட்டும் பணம் வராவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர். இந்தப் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் 11 மணி வரை பேருந்து நிலையத்தில் பணப்பட்டுவாடா நடைபெறாததால் காத்திருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி