9 மாத சிசு திடீர் உயிரிழப்பு

58பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், வரஹானபள்ளியை சேர்ந்த சிவக்குமார் மஞ்சுளா தம்பதிக்கு, 9 மாதத்தில் சசிதரன் என்ற ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மேல் ஈசல்பட்டியிலுள்ள தாய் வீட்டிற்கு கடந்த, 5 நாட்களுக்கு முன் மஞ்சுளா வந்துள்ளார். குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிப்பால், தர்மபுரியிலுள்ள தனியார்மருத்துவமனையில், 2 நாட்கள் சேர்த்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று குழந்தை இறந்தது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி