முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

580பார்த்தது
பதவி உயர்வு பெற்ற முது நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பொது குழு கூட்டம் மாவட்ட தலைவர். சி முருகேசன் அவர்கள் தலைமையில் தருமபுரி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சரவணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட பொருளாளர் கணபதி அவர்கள் நன்றி உரை கூறினார். மேலும் மாவட்ட பொது குழு கூட்ட முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது CPSஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை ப்படுத்த வேண்டும். ஆசிரியைகளின் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு சுடிதார் அணிய லாம் என அறிவித்த தமிழக அரசு க்கு நன்றி தெரிவித்தல். சிபிஎஸ்சி படக்குறைப்பு செய்தது போல் தமிழ் நாடு அரசும் 11, 12 ஆம் வகுப்பு பாடத்தை குறைக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மற்றும்100% தேர்ச்சி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது. காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை வழங்கவேண்டும். மருத்துவம் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தொடர்புடைய செய்தி