புத்தாண்டையொட்டி உழவர் சந்தையில் 38 டன் காய்கறி விற்பனை

74பார்த்தது
ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்ப டுவதை முன்னிட்டு, தர்மபுரி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க பொது மக்கள் வருகை நேற்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி 110 விவசாயிகள் மூலம், 8 லட்சம் மதிப்புள்ள 30 டன் காய்கறி, பழம் விற் பனை செய்யப்பட்டது. இவற்றை, 6 ஆயிரம் நுகர் வோர்கள் வாங்கிச் செல் கின்றனர். நேற்று நுகர் வோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரித்தது.

மொத்தம் 38 டன் காய்கறி, பழங்கள் 14 லட்சத்திற்கு விற்பனை செய் யப்பட்டது. நுகர்வோர் கூட்டம் அலைமோதிய தால், சாலையின் இருபுறத்திலும் டூவீலர், கார்கள், ஆட்டோக் கள் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன. தர்மபுரி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் கூட்டத்தை கண்காணித்து, ஒழுங்குப் படுத்தி சீர் செய் யும் பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :