பாஜகவிற்கு ஆதரவு கடிதம் தர முடிவு!

79பார்த்தது
பாஜகவிற்கு ஆதரவு கடிதம் தர முடிவு!
டெல்லியில் பிரதமரின் முகாம் அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கடிதம் வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாஜகவிற்கு ஆதரவளிக்க சில நிபந்தனைகளும் முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரதமரின் முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி