நெய்வேலி இரண்டாவது நாளாக போராட்டம்

51பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி. 2-வது சுரங்கத்தில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்த வேண் டும், வேலை நாட்களை குறைக்காமல் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என். எல். சி. 2-வது சுரங்கத் தின் நுழைவு வாயில் முன்பு நேற்று முன்தினம் ஒப்பந்த தொழிலாளர் கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உயர் அதிகாரிகளுடன் பேச் சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

அதன்படி நேற்று காலை 2-வது சுரங்க வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என். எல். சி. அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைக்கு சென்றனர். சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்ததொழிலாளர்கள் மதியம் 11. 30 மணியளவில் மீண்டும் 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி