ஸ்ரீமுஷ்ணம் கீழவன்னியர் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவர் நேற்று அதே பகுதியில் உள்ள கடைவீதிக்கு டீ குடிக்க சென்றார். அப்போது தேரடி அருகில் நின்று கொண்டிருந்தபோது திட்டக்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காகவிருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.