நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு "தீபாவளி விபத்துகளும், பாதுகாப்பு வழிமுறைகளும்" என்ற தலைப்பில் கடலூரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளந்திரையன் அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.