டாட்டா குழுமத்தின் தலைவர் திரு. ரத்தன் டாட்டா அவர்கள் காலமான செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவு நமது நாட்டிற்கு நேர்ந்த பேரிழப்பாகும். தொழிற்துறையின் பேராளுமையாக விளங்கிய அவர், இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்த திரு. ரத்தன் டாடா அவர்கள், ஏழை- எளிய மக்களுக்கு ஏராளமான அளவில் கொடையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.