கோவை மாநகராட்சி 56வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி , ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து நேற்று (நவ. 27) இரவு தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.