தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி., சுப்பராயன், நாகை எம்.பி., செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று (ஜுன் 7) நடந்த சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் இருவருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.