பேரூர்: தேனி வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி-வேளாண் பல்கலை தகவல்

51பார்த்தது
பேரூர்: தேனி வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி-வேளாண் பல்கலை தகவல்
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. அக்டோபர் 2024 மாதத்திற்கான பயிற்சி, அக்டோபர் 7, 2024 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது. பயிற்சியின் முக்கிய அம்சங்களில் தேனீ இனங்களை அடையாளம் காணுதல் மற்றும் வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்களுக்கான உணவுப் பயிர்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலை அதிகரிக்கும் பயிர்கள் பற்றிய விவரங்கள், தேன் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை அடங்கும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9. 00 மணிக்கு பூச்சியியல் துறைக்கு நேரில் வந்து, அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக ரூ. 590/- (ஐநூற்று தொண்ணூறு ரூபாய் மட்டும்) செலுத்த வேண்டும். பயிற்சி காலை 9. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, என்ற 0422-6611214 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி