மனைவி, மகளை தாக்கிய தொழிலாளி கைது

570பார்த்தது
மனைவி, மகளை தாக்கிய தொழிலாளி கைது
கோவை சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னராஜ்(43). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி போதையில் தனது மனைவி லதா(40) விடம் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல், நேற்று கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் தகாத வார்த்தைகள் பேசி லதாவை தாக்கினார். இதனை தட்டி கேட்ட அவரது மகளையும் தாக்கி மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து லதா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி