ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்.

79பார்த்தது
கோவை ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்.

அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்குகளை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

அதே போன்று ஈஷா யோக மையத்தை சார்ந்த நூற்றுக்கணக்கான பிரம்மச்சாரிகள் தங்களின் வாக்கினைப் பதிவு செய்தனர். அவர்களுடன் ஈஷா முழு நேர தன்னார்வலர்கள், ஆசிரமாவாசிகள் என ஈஷாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி