கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

1913பார்த்தது
கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது
கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் வருகிற 28ம் தேதி வரை சித்திரை பெருவிழா நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மாலை பூச்சாட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கரகோஷம் எழுப்பினர்.

நாளை மாலை 6. 30 மணிக்கு அக்னிசாட்டு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் மாலை நடைபெறும் திருவிளக்கு வழிபாட்டில் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளது. 20ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 21ம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 22ம் தேதி திருவிளக்கு வழிபாடு, 23ம் தேதி திருக்கல்யாண் உற்சவம், 24ம் தேதி சக்தி கரகம், அக்னிசட்டி, பால்குடம் புறப்பாடு கோனியம்மன் கோயிலில் இருந்து நடைபெற உள்ளது.

25ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், கம்பம் கலைத்தல், 26ம் தேதி தமிழில் இலட்சார்ச்சனை மற்றும் இறுதி நிகழ்வாக 28ம் தேதி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி