குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை

83பார்த்தது
குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை
சூலூர் பகுதியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தி வரும் வட மாநில தம்பதி இருவர் இரண்டு குழந்தைகளை கோவையில் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலீசார் இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக பீகாரில் 1, 500 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பெண் குழந்தையை சூலூரில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பகீர் தகவலும் வெளியாகி உள்ளது.
குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து குழந்தை கடத்தி வந்து விற்பனை செய்ததை உறுதி செய்து உள்ளனர். குழந்தை விற்பனையை உறுதி செய்தவர்கள் வாங்கிய நபர் குறித்து தகவல் தெரியாததால் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக கருமத்தம்பட்டி டி. எஸ். பி தங்கராமன் தலைமையில் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை செய்து வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி