கோவை வடக்கு 25 வது வார்டு காந்தி மாநகர் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை வடக்கு 25 வது வார்டு காந்தி மாநகர் மற்றும் வ. உ. சி நகரில் மய்யத்தின் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நம்மவரின் குரல் ஒலிக்க வேண்டும் என்றும், அதற்காக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட AKB பாபு, பால மணிகண்டன், முத்துமாரி, மணிமொழி, பாலகுமார், ஜோதிலட்சுமி, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் காந்தி மாநகர் 25வது வார்டு மாநகர செயலாளர் மாரியப்பன் நன்றியை தெரிவித்தார்.