19வயதுக்குட்பட்டவர்களுக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

50பார்த்தது
கோவை இறகுப்பந்து சங்கம் நடத்தும் மாநில தழுவிய 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பீளமேட்டில் உள்ள ராக்ஸ் அகாடமியில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் கீழ் நடத்தப்படும் இந்த சாம்பியன்ஷிப் போட்டி குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று போட்டிகள் நடைபெறும் ராக்ஸ் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளருமான வெ. அருணாச்சலம், ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் ஸ்வேதா கிருஷ்ணமூர்த்தியுடன் செய்தியாளர்களிடம் உரையாடினார்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மொத்தம 5 நாட்கள் நடைபெறுகிறது என்றும் இதில் தமிழகத்தின் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேர்ந்துள்ளதாகவும் வே. அருணாச்சலம் தெரிவித்தார்.

ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என 5 பிரிவுகளில் இங்கு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி