உயர் ரக போதைப்பொருள் சப்ளை; கென்யா பெண் உட்பட 3 பேர் கைது

71பார்த்தது
உயர் ரக போதைப்பொருள் சப்ளை; கென்யா பெண் உட்பட 3 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மருந்து சப்ளை செய்த கும்பலை பிடிக்க, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி சமீபத்தில் போதை மருந்து விற்பனை செய்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 102 கிராம் மெத்தபிட்டமின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன்குமார், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து சப்ளை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே(26) என்ற பெண் என்று தெரியவந்தது. இவர் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கூட்டாளி உகாண்டா நாட்டை சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க வந்துள்ளார். இதுகுறித்த தகவல் கிடைத்த கோவை தனிப்படை போலீசார் பெங்களூரில் கென்யா பெண்ணை கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து கைதான கென்யா பெண் உள்பட 3 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி