ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் பேட்டி

78பார்த்தது
கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது மக்கள் தங்கள் வாக்குகளை பாரத தேசம் மகத்தான நாடாக முன்னேற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களித்து இருக்கிறார்கள்
உண்மையிலேயே அந்த மகத்தான ஜனநாயகம் , உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்பது இந்திய தேசம் தான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இருக்கின்ற தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது இருந்த சந்தேகம் முற்றிலுமாக போயிருக்கும் என நம்புகிறேன்.

திமுக மாநாடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள் அதனால் தமிழகத்துக்கு நன்மையா இல்லையா என்பதை அடுத்து வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி