சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது கண்ணீர் மல்க மனு

572பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில், கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு உயிர் பாதுகாப்பு வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அவரது மனு மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியரும் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என நூர்முகமது குற்றம் சாட்டியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் வந்த நூர் முகமது, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும் இது நாள் வரை காவல்துறையினர் பாதுக்காப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடும் போதும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி