கோவை குனியமுத்துார் கங்கா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சஜிவ்(30). இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் வந்த சஜிவ்வின் மனைவி சத்ய நிஷா(25) தனது இரண்டு குழந்தைகளுடன், கணவரை விடுவிக்க கோரி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அவரிடம் பிரச்னையை கலெக்டரிடம் மனுவாக அளிக்க கூறினர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.