PSG கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம்

76பார்த்தது
கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் 2வது நாளாக கல்லூரி வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. கல்லூரி துறை தலைவர் டாக்டர் எல். கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் டி. பிருந்தா தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலாளர் டி. கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி. பாலகிருஷ்ணன் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியான என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால்
பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர். மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் போலீஸ் அக்கா என்ற திட்டத்தை கோவை மாநகர போலீசார் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே மாணவிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் புகார்களை பெண் போலீசாரை போலீசாராக எண்ணாமல் தங்களை
சகோதரியாக நினைத்து புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி