கோவை: கே. பி. ஆர். கலைக் கல்லூரியில் ஆண்டு விழா!

71பார்த்தது
கோவை கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கல்லூரி ஆண்டுவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரிச் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் கலந்துகொண்டு, வளர்ச்சியின் பாதையினைக் காண இலக்கினை நோக்கித் துணிந்து முன்னேற வேண்டும் எனக்கூறி வாழ்த்தினார். சிறப்பு விருந்தினராகப் புனேவில் உள்ள டேலண்ட் அக்குயிசேஷன் நிறுவனத்தின் மேலாளர் யுவராஜ் சர்மா கலந்துகொண்டு, தொடர் முயற்சிகளைச் செய்வது வெற்றிக்கான வழியை உருவாக்கும் என எடுத்துரைத்தார். கல்லூரிச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் முழுமதிப்பெண் பெற்ற மாணவர்கள், முழுமையான வருகைப்பதிவு வழங்கிய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நூறு சதவீதம் தேர்ச்சி கொடுத்த பேராசிரியர்கள். ஆய்வுத்துறையில் தடம் பதித்தப் பேராசிரியர்கள் என பலருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்வியில் சிறந்த மாணவிக்கான விருதினை மாணவி ஐஸ்வர்யா பெற்றுக் கொண்டார்.
பணிநிலையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குப் பணிநியமன ஆணையும், சிறந்த மேனாள் மாணவர் விருதும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி