நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ் பேட்டி

58பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்.

இதில், அரசியல் கட்சியினர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமனோர் வாக்களித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக வடவள்ளி பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்க மற்றும் நேர்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் காமராஜ் லிங்கனூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் அவரது வாக்கை செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகரில் 24 மணி நேரம் குடிநீர் சேவை, விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தி தர வேண்டும். மேலும் நாம் அனைவரும் நூறு சதவீதம் வாக்களித்து இந்தியாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி