கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உரை

52பார்த்தது
கோவையில் உள்ள அனைத்து மத தளங்களையும், மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒருமைப்பயண விழா மாணவர்களுடன் காலையில் புனித மைக்கேல் தேவாலயத்தில் இருந்து பயணத்தை துவங்கிய மாணவர்கள், பின்னர் அருள் மிகு கோனியம்மன் கோயில், அத்தர் ஜமாத் மசூதி, குருத்வாரா சிங் சபா மற்றும் ஜெயின் கோயில்களுக்குச் சென்றனர் இந்தப் புனிதத் தலங்களுக்கு சென்ற அவர்களின் பயணத்தில் மாணவர்கள் ஒவ்வொரு மதத்தின் பழக்கவழக்கங்களின்படி வரவேற்கப்பட்டனர், மேலும் அந்தந்த மதங்களின் ஆன்மீகத் தலைவர்கள் அவர்கள் பின்பற்றும் கொள்கைகளையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் வகையில் போதனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அணைத்து மதத்தினரும் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்துடன் இந்த பயணம் முடிவடைந்தது இதில்,
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுனார். நிறைவு விழாவில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், ஏ. ஜே. ராஜா, கோவை பகுதி தலைவர் சிஎஸ்ஐ கோவை மறைமாவட்டம், அப்துல் ஹக்கீம், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி