வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் சொல்லும் வாகனங்கள் ரெடி

3368பார்த்தது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் சொல்லும் வாகனங்கள் காவல்துறை பயிற்சி பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் வாக்கு செலுத்துவதற்காக கோவை மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச் சுவடிகளுக்கு எடுத்து செல்வதற்காக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களில் வாக்குச் சாவடிகளின் எண் குறிப்பிட்ட கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு பதிவு நடக்கும் இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஓட்டு பதிவு பணியில் ஈடுபட உள்ள ஊர்காவல் படையினர் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் வாகனங்களில் அந்தந்த தொகுதிக்கான ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும் தேர்தல் பணிக்காக 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆலோசனை வழங்கப்பட்டது.