கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்கள் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், தமிழ்நாடு ஹோட்டல் சுற்றுலாத்துறை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகள் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக நாளை மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது மதுபான வகைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்தில் இருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.