கோவையில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டம்

5361பார்த்தது
கோவையில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டம்
2023-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 2024-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 2024-ம் ஆண்டு பிறந்ததையொட்டி கோவையில் மக்கள் முக்கிய பகுதிகளில் திரண்டு புதிய ஆண்டை ஆடல், பாடல்களை இசைக்க விட்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதலே கோவை வாலாங்குளத்தில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிய தொடங்கினர். அங்கு பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இன்னிசை கச்சேரிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், லேசர்ஷோவும் நடத்தப்பட்டது.

வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் சின்னத்திரை நடிகர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிமிக்கிரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி